திங்கள், 21 ஜனவரி, 2013

kavithai kootam




உழுதநில வாசனை போல்
உயிருக்குள் மணப்பவனே!
உன்னுருவம் பார்க்கும் முன்னே
உலக விட்டு மறைஞ்சவனே!

அலைபேசி வழியாக -உன்
அகம் பார்க்க வச்சவனே!-உன்
முகம் பார்க்கும் கனவு இப்ப
மூச்சிழந்து போனதையா!

ஐயா சொல்லுங்கன்னு
அன்போடு நீ பேச
சொல்லே சிலிர்க்குமடா-உன் குரல்
தேன்போல இனிக்குமடா!

எங்க இனி அதக் கேப்பேன்!
எப்ப இனி உனைப் பாப்பேன்!

மெய்யாநீ செத்த சேதி கேட்டு
பொய்யா போனதடா பூமியில சாமியெல்லாம்!
ஐயோ வேகுதடா-எங்க
அடிமனசு ஆவியெல்லாம்!

பட்டி ஆடு ஓட்ட
பாசத்தால் தேரோட்ட
குட்டி ஆடுகல்லாம்
கூத்தாடும் உங்கூட

வெட்டி எரிஞ்சது போல்
விட்டு பிரிஞ்சிட்டியே!-ஒரு
சட்டி குவலக்குள்ள
சாம்பலா அடைஞ்சிட்டியே!

ஐயா முருகையா-என் 
அடிமனசு துடிக்குதடா!
எரிமலைக் குழம்பாட்டம்-இப்ப
என் உசுரு வெடிக்குதடா!

உன்னப் பார்த்துப் பேசும்
எங்கணக்கு தப்பாச்சி!
உனக்கா அழுததுல
ஆத்துநீரு உப்பாச்சி!

தரையில இடிவிழுந்தா
தாங்குமடா இப்பூமி!-உன்
தலையில விழுந்திருச்சே
தாங்கலடா எஞ்சாமி!

காத்துல கரைஞ்சுட்டியே!-என்
கண்ணைவிட்டு மறைஞ்சிட்டியே!
உத்துல சுரப்பதுபோல்-என்
உசுருக்குள்ள சுரந்துட்டியே!

ஆளுக அழுதாங்கன்னா
ஆறுதலா தேத்திருப்பேன்!-உன்
ஆடுக அழுகுதையா
ஐயோ நான் என்ன செய்ய?

-விநாயக மூர்த்தி, அந்தியூர்.
9715216794
@
தாய்மொழி காக்கும்
ஆவல் மிகுந்து...
ஆடுகளை மேய்த்தபடி மகிழ்ந்து...
நீ விரித்த "பா": வாடை அறிந்து,
"ஆநிரை" மெய்த்த
கண்ணனே வந்தானோ...
மின்னலாய்!
-முருக வெள்ளியங்கரி, திருப்பூர்
9952822635

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக