@
மீன்களை
வளர்க்கிறாள்
தூண்டில் விற்கிறவளும்!
@
ப்ரியம் குறைகிறது
வண்ணமீன் வாங்கியதிலிருந்து
நாய்க்குட்டியிடம்!
@
விடிய விடிய நிலவு தின்றும்
படித்துறை மீன்கள்
பொரிக்காய் படையெடுக்கும்!
@
பொழுதுபோகவில்லை
மீன்களுக்கு
கொக்குகளில்லாத குளம்!
@
புழுமாட்டுகையில் குத்தியது,
வீடு திரும்பினேன்
தூண்டில் உடைத்து!!
-ப.சி. கார்த்திகேயன்,
வாடிப்பட்டி.
9677718876

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக